எப்ஏ கோப்பை கால்பந்து லிவர்பூல் வொண்டர்ஃபுல்: பார்ன்ஸ்லேவை வீழ்த்தி அசத்தல்

 

லண்டன்: எப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று, லிவர்பூல் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் பார்ன்ஸ்லே அணியை வெற்றி கண்டது. லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் எப்ஏ கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த லிவர்பூல் அணியும் பார்ன்ஸ்லே அணியும் மோதின. துவக்கம் முதல் லிவர்பூல் அணி வீரர்கள் அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் 9வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டொம்னிக் ஸோபோஸ்லாய் தனது அணிக்காக முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து 36வது நிமிடத்தில் ஜெரீமி பிரிம்பாங் அணியின் 2வது கோல் போட்டு அசத்தினார். முதல் பாதி ஆட்டம் முடியும் முன், பார்ன்ஸ்லே அணியின் ஆடம் பிலிப்ஸ், 40வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோல் போட்டார். 2ம் பாதியில் ஆக்ரோஷமாக ஆடிய லிவர்பூல் அணி, தங்கள் பக்கம் பெரும்பாலான நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். போட்டியின் 84வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் புரோரியன் ரிட்ஸ் அணியின் 3வது கோல் போட்டார். போட்டியின் கடைசி கட்டத்தில் 90+4வது நிமிடத்தில் ஹியுகோ எகிட்கே, மேலும் ஒரு கோலடித்தார். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதனால் 4-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அபார வெற்றி பெற்றது.

Related Stories: