பிட்ஸ்

 

* ஓய்வு பெறுகிறார் ஆலிஸா ஹீலி

சிட்னி: ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஆலிஸா ஹீலி (35), வரும் மார்ச்சில் இந்தியாவுடன் நடக்கும் போட்டித் தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுடன் நடக்கும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கும், ஒரு டெஸ்ட் போட்டிக்கும் ஆஸி அணிக்கு ஆஸிஸா ஹீலி கேப்டனாக செயல்படுவார். அதன் பின், இந்தியாவுடன் நடக்கும் டி20 தொடரில் அவர் ஆட மாட்டார். இது தொடர்பாக ஆலிஸா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆஸ்திரேலியாவில் இந்தியாவுடன் நடக்கும் தொடர், என்னுடைய கடைசி போட்டிகளாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

* கிங் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ்

துபாய்: வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 19ம் தேதி துபாயில் துவங்க உள்ளது. இத்தொடரில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பிராண்டன் கிங் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், அகீல் ஹொசேன் ஆகியோர் எஸ்ஏ20 தொடரில் தற்போது ஆடி வருவதால், அணியில் இடம்பெறவில்லை. அதேசமயம், ஸமர் ஜோசப், எவின் லூயிஸ் ஆகிய வீரர்கள் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். இந்த அணிகள் இடையிலான 2வது போட்டி 21, 3ம் போட்டி 22ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

* நார்வே செஸ்சில் கார்ல்சன் பங்கேற்பு

ஓஸ்லோ: நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன், 20 முறை பல்வேறு பிரிவுகளில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கிளாசிகல் செஸ் வகையில் இருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தார். அதனால், ஓஸ்லோவில் நடைபெறும் நார்வே செஸ் போட்டியில் கார்ல்சன் ஆடுவாரா என்பது சந்தேகமாக இருந்தது. இந்நிலையில், நார்வே செஸ் டோர்னமென்டில் விளையாட முதல் வீரராக காரல்சன் பதிவு செய்துள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. இப்போட்டிகளில் ஆடும் மற்ற வீரர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Related Stories: