சென்னை: இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் என்ற பட்டியலில் தேசிய அளவில் சென்னை 2ஆம் இடமும் கோவை 10ஆம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது. அவதாா்’ குழுமம் ‘ இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் 2025 என்ற தலைப்பில் பல்வேறு நகரங்களில் ஆய்வை நடத்தியது. ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் முதல் 25 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து 7 நகரங்கள் இடம் பெற்றுள்ளனர். தேசிய அளவில் முதல் 10 இடங்களில் சென்னை மற்றும் கோயம்பத்தூர் ஆகிய 2 தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் சென்னை நகரம் 2ஆம் இடத்திலும், கோயம்பத்தூர் 10வது இடம்பிடித்து இந்தியவிலேயே தமிழ்நாடு வலுவான முத்திரையை படைத்துள்ளது. சென்னை நகர சேர்க்கை மதிப்பின் 49.86சதவீதமும் சமூக உள்ளடக்க மதிப்பின் 48.16 சதவீதமும் பெற்று 2ம் இடம்பிடித்துள்ளது. திருச்சி 13வது இடமும், மதுரை 15வது இடமும், சேலம் 18வது இடமும், வேலூர் 19வது இடமும், ஈரோடு 25வது இடமும் பெற்றுள்ளது. இது சமூக உள்ளடக்கம் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கான வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் தமிழகத்தின் நிலையான கவனத்தை பிரதிலளிப்பு வகையில் அமைந்துள்ளது.
