மாணவி மீது அவதூறு கல்லூரி முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பொறுப்பு வகித்து வருபவர் சுமிதா. இவரது கணவர் பொன்னுத்துரை ஆகியோர் ஒரு மாணவியின் சமூக வலைதள பதிவிற்கு அவதூறாக பதிவிட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் இணையதளம் மூலம் புகார் அளித்தார். புகாரைப் பரிசீலித்த போலீசார், முதல்வர் சுமிதா மற்றும் பழையபேட்டையைச் சேர்ந்த அவரது கணவர் பொன்னுத்துரை ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக கல்லூரி கல்வித்துறை நிர்வாகம் இந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தியது. இதையடுத்து பொறுப்பு முதல்வர் சுமிதாவை சஸ்பெண்ட் செய்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இந்தச் சஸ்பெண்ட் உத்தரவை, கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் பிறப்பித்துள்ளார்.

Related Stories: