×

தூத்துக்குடி கேடிசி நகரில் ரேஷன் கடை கட்டுமான பணி

தூத்துக்குடி, ஜன. 10: தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட கேடிசி நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான ரெங்கசாமி, திமுக பகுதி செயலாளர் சிவக்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் பூவேஷ்நாதன், தர்மராஜ், வட்ட செயலாளர்கள் ராஜன், தெய்வேந்திரன், தர்மராஜ், துரைராஜ், வேல்முருகன், செல்வகுமார், செல்வராஜ், ராஜாமணி, சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : KTC Nagar, Thoothukudi ,Thoothukudi ,KTC Nagar ,Thoothukudi Corporation ,Shanmugaiah MLA ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை