திராவிட பொங்கல் வாலிபால் போட்டி

தேன்கனிக்கோட்டை, ஜன.10: தேன்கனிக்கோட்டையில் திராவிட பொங்கல் வாலிபால் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ பரிசுகள் வழங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் திராவிட பொங்கல் வாலிபால் போட்டி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்றன. தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2ம் பரிசு ரூ.6 ஆயிரமும், 3ம் பரிசு ரூ.4 ஆயிரமும் மற்றும் 4ம் பரிசாக ரூ.2 அயிரம் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன், கட்சி நிர்வாகிகள் சல்மான், எல்லபன், சீனிவாசன், சையத்பாஷா, நாசீர், அல்லாபகஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Related Stories: