ஈரான்: தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பேசியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தாங்கள் போரை விரும்பவில்லை என்றும் அப்பாஸ் கருத்து தெரிவித்தார்.
2025ல் நடந்தது போல தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவோடு அணுசக்தி திட்டம் குறித்து விவாதிக்கத் தயார் என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தை, பரஸ்பர மரியாதையுடன் இருப்பதையே ஈரான் விரும்புகிறது. ஜூன் 2025 போல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
