ஈரோடு: சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,700 விற்பனையான நிலையில் தற்போது ரூ.4,300க்கு விற்கப்படுகிறது. முல்லை ஒரு கிலோ ரூ.1,400, கனகாம்பரம் ரூ.700, செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
