- எங்களுக்கு
- வாஷிங்டன்
- ஐக்கிய மாநிலங்கள்
- இந்தியா
- சட்டமன்ற உறுப்பினர்
- அமெரிக்க பாராளுமன்றம்
- பி. லிண்ட்ரோ
- கிரஹாம்
- ரஷ்யா
வாஷிங்டன்: இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 500% இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய சட்ட முன்வடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சட்ட முன்வடிவு தயாராக இருப்பதாக எம்.பி லிண்ட்ரோ கிரஹாம் பேட்டி அளித்தார். ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், யுரேனியம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்கள் மீது 500% வரிவிதிக்க சட்டம். இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், 500% ஆக அதிகரிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினாலும் கூட யுரேனியம் வாங்குவதை இந்தியா நிறுத்த வாய்ப்பு இல்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான யுரேனியத்தை ரஷ்யாவே இந்தியாவுக்கு வழங்கி வருவதால் அதனை நிறுத்த முடியாது.
