×

எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது: வைகோ திட்டவட்டம்

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் நேற்று நடைபயணத்தின்போது வைகோ பேசியதாவது: வரும் வழியில் என்னை சந்தித்த ஏழை பெண்கள், எங்களது பசி தீர்க்க சோறு போட்ட திட்டம் 100 நாள் வேலை திட்டத்தை மோடி சீரழிந்துவிட்டார் . அதற்கு பொறுமையாக இருங்கள் நிலைமை மாறும் என்றேன். உங்களுக்கு வாழ்வை அளிக்க இன்றைக்கு சகோதரர் ஸ்டாலின் ஆட்சி மீண்டும் தொடரும். தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுகவை துடைத்தெறிவோம் என்று கூறி உள்ளார். ரத்தம் சிந்தி வளர்த்த திராவிட இயக்கத்தை எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Amit Shahs ,Dravidian ,Vaiko ,Dhuvarankurichi ,Dhuvarankurichi, Trichy district ,Modi ,
× RELATED 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவி கேட்கும்...