பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு புதிய வாகனங்கள்

பெரம்பலூர்,ஜன.7: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளனி- வருவாய்த்துறை துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அரசால் வழங்கப்பட்ட புதிய வாகனங்களைப் பார்வையிட்டு, சம்மந்தப்டப்ட அலுவலர்களிடம் அதற்கான சாவியினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அந்த வாகனங்களுக்கான சேவையினை சென்னை தீவுத் திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர், சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார்கள் (குன்னம் மற்றும் வேப்பந்தட்டை) ஆகியோர் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை மாவட்டக் கலெக்டர் மிருணாளினி பார்வையிட்டு, சம்மந்தப்பட்ட துறை அலவலர்களிடம் வாகனத்தின் சாவியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சொர்ணராஜ், சமூக பாது காப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சிவக்கொழுந்து, மாவட்டக் கலெக்டர் அலுவலக பொது மேலாளர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

 

Related Stories: