சட்டீஸ்கரில் 26 நக்சல்கள் சரண்

சுக்மா: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் அரசின் சரணடைதல் மற்றும் புனர்வாழ்வு திட்ட கொள்கையால் ஈர்க்கப்பட்டு 26 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்தனர். இவர்கள் 7 பேர் பெண் நக்சல்கள். இவர்களில் 13 பேரின் தலைக்கு காவல்துறையால் மொத்தம் ரூ.65 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தின் பட்டாலியன், தெற்கு பஸ்தர் பிரிவு, மாட் பிரிவு மற்றும் ஆந்திரா ஒடிசா எல்லைப்பிரிவு ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். சட்டீஸ்கரின் அபுஜ்மாட், சுக்மா மற்றும் ஒடிசாவின் எல்லையோரப் பகுதிகளில் நடந்த பல வன்முறை சம்பவங்களில் தொடர்புடையவர்கள்.

Related Stories: