புதுடெல்லி: ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை நிர்வகிக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தற்போது மாதத்திற்கு ரூ.15,000 ஆக ஊதிய உச்ச வரம்பு நிர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வரம்பை திருத்தி அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் மகேஸ்வரிஅமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடுகையில், கடந்த 11 ஆண்டுக்கும் மேலாக பிஎப் ஊதிய உச்ச வரம்பு திருத்தி அமைக்கப்படவில்லை.
இதனால் சமூக நலத் திட்டமான இபிஎப்ஓ திட்டத்தின் பலன்களும் பாதுகாப்பும் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாரர் நீதிமன்ற உத்தரவு நகலுடன் 2 வாரத்திற்குள் ஒன்றிய அரசுக்கு மனு அளிக்கவும், அந்த மனு மீது 4 மாதத்தில் முடிவெடுக்கவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
