சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டம் 20-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்ட்டது. மேலும் புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை: தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு தமிழ்நாடு மீள்வதற்கே பல மாதங்கள் ஆனது. நிதி நெருக்கடிகளை கடந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.சூப்பர் ஸ்டார் என்று நமது ஸ்டேட் பெயர் பெற்றுள்ளது:
உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம் அமலாகிறது. வீடு வீடாக சென்று 50,000 தன்னார்வலர்கள் குடும்பங்களின் கனவை கேட்டறிய உள்ளனர்.
வீடு வீடாக சென்று தன்னார்வலர்கள் முதலில் படிவத்தை கொடுத்து விடுவார்கள். உங்கள் குடும்பத்தினுடைய கனவாக என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதுதான் இந்த திட்டம். சூப்பர் ஸ்டார் என்று நமது ஸ்டேட் பெயர் பெற்றுள்ளது. முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகிறது. வீடு வீடாக சென்று தன்னார்வலர்கள் முதலில் படிவத்தை (கனவு அட்டை) கொடுத்து விடுவார்கள்.
முத்தாய்ப்பான மூன்று கனவுகளை சொல்லுங்கள் என்று கேட்போம். குடும்பங்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரின் கனவுகளையும் கேட்டறிந்து நிறைவேற்ற உள்ளோம். 2 நாட்களுக்கு பிறகு நிரப்பப்பட்ட படிவத்தை பெற்று பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்வோம். ஜன.9ம் தேதி பொன்னேரியில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜன.11 முதல் “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்ட இணையதளத்தை பயன்படுத்தலாம்
