அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க கோரிக்கை

 

ஊட்டி, ஜன. 6: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் ஹிந்து மஸ்தூர் சபா கலெக்டரிடம் மனு அளித்துள்ளது.
ஹிந்து மஸ்தூர் சபா மற்றும் தமிழ்நாடு எச்எம்எஸ்., கட்டுமானம் அமைப்புசாசா தொழிலாளர் ேபரவை தலைவர் சுப்பிரமணயம் மற்றும் ெபாதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தியான கட்டுமான, அமைப்புசாரா அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
2019, 2020ம் ஆண்டுகளில் ஒன்றிய அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றியுள்ள திருத்தம் சட்டம் என்பது முற்றிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான சட்டமாக உள்ளது. தொழிலாளர்கள் பாதிக்காமல் இருக்க, இந்த தொழிலாளர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: