ரயிலில் டிக்கெட் பரிசோதகருக்கு அடி உதை

பாலக்காடு, டிச. 31: பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி ஓங்கல்லூரை சேர்ந்தவர் முகமதுஅன்வர் (28). இவர், நேற்று முன்தினம் ஷொர்ணூர் சந்திப்பிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக மங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஸ்லீப்பர் கோச்சில் பயணித்துள்ளார்.

அப்போது டிக்கெட் பரிசோதகர் டிக்கேட் கேட்டபோது, அவரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மற்றொரு டிக்கெட்டு பரிசோதகர் வந்துள்ளார். அவரும், விசாரணை செய்தபோது இருவரிடமும் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரயில் பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையம் வந்தவுடன் ரயில்வே போலீசார்களிடம் டிக்கெட்டு பரிசோதகர்கள் புகார் அளிக்கவே, டிக்கெட் எடுக்காமல் பயணித்த முகமதுஅன்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர். இந்த சம்பவம், பாலக்காடு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related Stories: