கடும் பனி மூட்டத்தால் குளிர் அதிகரிப்பு

ஊட்டி, டிச. 31: நீலகிரியில் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக பகல் நேரங்களிலேயே குளிர் அதிகமாக காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாறுப்பட்ட காலநிலை நிலவுகிறது. சில சமயங்களில் வெயிலும், சில சமயங்களில் மேக மூட்டம் மற்றும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

நேற்று, பகல் நேரங்களிலேயே பனி மூட்டம் காணப்பட்டது. இதனால், குளிர் வாட்டியது. ஊட்டி மட்டுமின்றி, குன்னூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளிலும் இது போன்று பனி மூட்டம் காணப்பட்டதால் பகல் நேரங்களிலேயே குளிர் அதிகமாக உணரப்பட்டது. குறிப்பாக, தொட்டபெட்டா, படகு இல்லம், தேயிலை பூங்கா போன்ற பகுதிகளில் குளிர் வாட்டியதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

Related Stories: