சென்னை ஐகோர்ட்டில் ஆஜராக ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் 73 பேர் நியமனம்

சென்னை: ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: சென்னை உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றிய அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக மூத்த பிரிவு வழக்கறிஞர்களாக டி.ஐ.ராமநாோதன், டி.சரவணன், எஸ்.முத்துராமன், ஜி.வெங்கடேசன், எம்.ஆர்.ஜோதிமணியன், வி.வேலு உள்ளிட்ட 15 வழக்கறிஞர்களும், ஒன்றிய அரசு வழக்கறிஞர்களாக எல்.மாசிலாமணி, கே.அசோக், ஆர்.சிலம்பண்ணன், ஆர்.குயிலன் உள்ளிட்ட 17 வழக்கறிஞர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக மூத்த பிரிவு வழக்கறிஞர்கள் கே.ஆர்.லட்சுமன், ஒய்.சசிகுமார், கே.அசோக்குமார் ராம் உள்ளிட்ட 9 வழக்கறிஞர்களும், ஒன்றிய அரசு வழக்கறிஞர்களாக எம்.கஜேந்திரன், ஏ.முத்துராமலிங்கம், கே.பிரபு உள்ளிட்ட 12 வழக்கறிஞர்களும் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை கிளை நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆஜராக ஏ.ஆர்.சக்திவேல், ஆர்.கே.காந்தி, பி.ராகவன் ஆகியோரும், கூடுதல் வழக்கறிஞராக இ.மித்தேஷ் பவித்திரன் நியமிக்கப்படுகிறார்கள். திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், கோவை, திருவண்ணாமலை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் ஆஜராக மொத்தம் 16 வழக்கறிஞர்களும் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: