அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: 3ம் பருவ பாடப்புத்தகம் விநியோகம்

சென்னை: அரையாண்டு விடுமுறை முடிவடைந்ததை அடுத்து, அனைத்து பள்ளிகளும் நேற்று வழக்கம் செயல்பட தொடங்கின. இதையடுத்து, 3ம் பருவ பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 10ம் தேதி முதல் உயர் வகுப்புகளுக்கும், 15ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் கீழ் வகுப்புகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி முதல் அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 4ம் தேதி வரை சுமார் 12 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜனவரி 5ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விடுமுறை 12 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிக்கை 25ம் தேதியும், 2026ம் ஆண்டு பிறப்பு ஜனவரி 1ம் தேதியும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இந்த விடுமுறை நாட்கள் 4ம் தேதியுடன் முடிந்ததை அடுத்து, வழக்கம் போல பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு இயங்கின. மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு திரும்பினர். பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் நடந்து, வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டிருந்தன. இதுதவிர குடிநீர் மற்றும் கழிப்பறைகளும் மாணவ, மாணவியர் பயன்படுத்த வசதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டன. நேற்று பள்ளிக்கு திரும்பிய மாணவ, மாணவியரில் உயர் வகுப்புகள் தவிர கீழ் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவப் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

Related Stories: