குட்கா கடத்திய கார் தலைகுப்புற கவிழ்ந்தது

நல்லம்பள்ளி, ஜன.6: தொப்பூர் அருகே குட்கா மூட்டைகள் கடத்தி சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரிலிருந்த 110 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த பொம்முடி-தொப்பூர் சாலையில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், விபத்துக்குள்ளான காரில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. குட்காவை கடத்திச் சென்ற போது விபத்து ஏற்பட்டதால், காரை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விபத்துக்குள்ளான காரை மீட்டு காவல் நிலையத்திற்கு போலீசார் எடுத்து சென்றனர். காரில் 15 மூட்டைகளில் 110 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: