புதுக்கோட்டை, ஜன.6: புதுக்கோட்டைியில் இன்று இலவச சித்த மருத்துவம் நடைபெறுகிறது என சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் லூர்து மேரி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்த மருத்துவப் பிரிவில் நடைபெறும் இந்த முகாமை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை நடத்துகின்றன. இம்முகாமில் சளி, இருமல், மூக்கடைப்பு, தோல் நோய்களான கரப்பான், சொரியாசிஸ், ஒவ்வாமை, பித்தவெடிப்பு, மூட்டுவலி, கழுத்து எலும்பு தேய்மானம், இடுப்பு எலும்பு தேய்மானம், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, வயிற்றுப்புண், மூலம் போன்ற அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் லூர்து மேரி கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுகையில் இன்று இலவச சித்த மருத்துவ முகாம்
- சித்த மருத்துவ
- முகாம்
- புதுக்கோட்டை
- சித்த மருத்துவ அதிகாரி
- டாக்டர்
- லூர்து மேரி
- மருத்துவ
- தேசிய சித்த மருத்துவ தினம்
