×

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்ற நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காவிட்டால், நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என ஈரோடு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 42 ரிசார்ட்டுகளை சீல் வைக்க தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நமது பொழுதுபோக்குக்காக வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் செயல்படும் சட்டவிரோத ரிசார்ட்டுகள் காரணமாக சுற்றுச்சுழல் பாதிப்பு என மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோயில் திருவிழா, ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். இந்த விழாவுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் வருவார்கள். அவர்கள் வரும் வாகனங்களால் ஒலி மாசு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இது வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் தொடர்ந்த வழக்கு விசாரணை ஜனவரி 19க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Sathyamangalam Tiger ,Reserve ,High Court ,Erode ,Sathyamangalam Tiger Reserve ,Erode Collector ,Sathyamangalam ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...