சென்னை: தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் ‘திமுக தலைமையிலான கூட்டணியைவிட ஒரு வலுவான அணி இதுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்கிற நிலை வந்ததாக மார்க்சிஸ்ட் கருதவில்லை. தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது. அமித்ஷாவின் பேச்சு, அதிமுக- பாஜக கூட்டணி குறித்து மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
