×

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற செங்கோட்டையன் காலாவதியான மாத்திரை: வைகைச்செல்வன் கேள்வி

சென்னை: செங்கோட்டையன் காலாவதியான மாத்திரை என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் காலாவதியான மாத்திரை போன்றவர். அவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்டவர். எடப்பாடியாரால் அமைச்சராக உயர்த்தப்பட்டவர். தற்போது, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற அவர், என்ன சாதனை செய்யப் போகிறார்?. பல்லு போனவர்கள், சொல்லு போனவர்கள், செல்வாக்கு இழந்தவர்கள், நோயாளிகளாக இருப்பவர்களை இணைத்துக்கொண்டு எந்த கட்சியும் வளர முடியாது. அதனால், அதிமுகவிற்கு எந்த சேதாரமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், மதனந்தபுரம் பழனி, களக்காட்டூர் ராஜி, மாணவரணி செயலாளர் திலக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Sengkottayan ,Atamugav ,Davegav ,Vaikaichelvan ,Chennai ,Former Minister ,Adimuka ,Kanchipuram ,District ,Kancheepuram ,MGR ,
× RELATED சொல்லிட்டாங்க…