×

கடலூரில் 9ம் தேதி தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு வருகிற 9ம் தேதி கடலூர் பாசார் கிராமத்தில் நடைபெற உள்ளது. யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்பட உள்ளது. மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்டது. அன்றைய தினம் மதியம் 2.45 மணிக்கு கட்சி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 3.23 மணிக்கு பரத நாட்டியம் (டாக்டர் சுகந்தி), மாலை 3.28 மணிக்கு கேப்டனை பற்றிய கவிதை (மோனிகா ஸ்ரீ), மாலை 3.40 மணிக்கு கேப்டனின் சாதனை இன்னும் நிலைத்து இருக்க காரணம் சினிமாவா? அரசியலா? (பட்டிமன்றம்), மாலை 4.40 மணி கலை குழு நாராயணன் நடனம், மாலை 4.45 மணி பரத நாட்டியம் குழு (ஜெகதீஸ்வரி சசிதரன்), மாலை 4.55 மணி கிராமிய கலைமணி கே.பி.தங்கவேல் தப்பாட்டக் கலைக்குழு நிகழ்ச்சி, மாலை 5.10 மணி கானா பாலா பாடும் பாடல், மாலை 5.20 மணி கலை குழு நாராயணன் நடனம். மாலை 5.25 பவித்ரா பாடல், மாலை 5.30 மணி கலை குழு நாராயணன் நடனம், மாலை 5.35 மணி செந்தில் ராஜலெட்சுமி பாடல் கச்சேரி, மாலை 5.55 மணி பொட்டு வச்ச தங்கக்குடம் நடனம் பாடல் (கலை குழு நாராயணன்), மாலை 6 மணி கேப்டன் தோற்றம் போல் நடனம் (கலை குழு நாராயணன்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMDK People's Rights Recovery Conference ,Cuddalore ,Chennai ,People's Rights Recovery Conference ,DMDK ,Cuddalore Pasar village ,
× RELATED சொல்லிட்டாங்க…