தஞ்சை: தேர்தல் வெற்றிக்காக சாதி, மதங்களை பயன்படுத்தக்கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார். அமமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. 19 தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியாது என்றபோது தினகரன் கூடாரம் காலி என்று பேசினர். தினகரன் கூடாரம் காலி என்று பேசியவர்கள் ஆட்சியை இழந்தனர்.
அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் ஜாதி, மத அரசியலை பயன்படுத்தி பிரிவினையை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மதம், ஜாதி, கடவுள் பெயரில் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது. திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு அமைப்பையோ, கட்சியையோ அமமுக ஏற்காது.
ஆளும்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைவோம். கூட்டணி அரசில் அமமுக இடம்பெறும். நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தொடங்கப்பட்டது அமமுக. அமமுகவினர் எதிர்பார்க்கும் அளவுக்கு கூட்டணி அமையும். சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட 3,000 பேர் விருப்ப மனு அளித்தனர். கவுரவமான இடங்களை பெற்று ஆட்சி அமைப்போம். அமமுகவினர் நிச்சயம் அமைச்சர்கள் ஆவார்கள்.

