சென்னை: அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஓய்வூதிய நிதியத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக ரூ.11,000 கோடி வழங்கும். அரசு ஊழியர்கள் பெறும் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு இணையாக அகவிலைப்படி அறிவிக்கப்படும். இந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
உறுதியளிக்கப்பட்ட 50% ஓய்வூதியம் வழங்குவதற்கு பயனாளிகளின் 10% பங்களிப்போடு ஓய்வூதிய நிதியம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் இறந்துவிட்டால் அவர் பெற்று வந்ததில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் பணி ஓய்வு, பணி காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
