×

பொங்கலுக்கு பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சென்னை : பொங்கலுக்கு பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, “கூட்டணி குறித்து மாநாட்டில் அறிவிப்பதற்கான முன்னோட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமைக் கட்சிகள் தான். தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அட்டைப் பெட்டியில் யாருடன் கூட்டணி வைக்க விருப்பம் என்ற கருத்தை மாவட்டச் செயலாளர்கள் எழுதிப்போட்டுள்ளனர்; அதை தனிப்பட்ட முறையில் நான் படிப்பேன்.

அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணியை முடிவு செய்து வரும் 9ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன்.பொங்கலுக்கு பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும். இந்த நிமிடம் வரை எந்த கட்சியும் இறுதிக் கூட்டணி இதுதான் என அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருப்பவர்கள் வெளியேறலாம், புதியவர்கள் வரலாம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கூட்டணிகளில் இன்னும் நிறைய மாற்றங்கள் நிகழவுள்ளன. நடக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல், முன்னுரிமை சட்டமன்றத்துக்குதான். ராஜ்ய சபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது, அது ஒருபுறம் இருக்கட்டும். எங்களுடைய கவனம் சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் இருக்கும். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Premalatha Vijayakanth ,Chennai ,Demutika ,General Secretary ,Pongal ,Premalatha ,
× RELATED பாஜ கொடி இருந்தால் சுங்கக்கட்டண...