- தமிழ்நாடு பற்றிய நாடாளுமன்ற நிலைக்குழு
- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
- டிரம்ப்
- முதல் அமைச்சர்
- மு. கே.
- பாராளுமன்ற நிலைக்குழு
- ஸ்டாலின்
- மோடி
- இந்தியா
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50% வரியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுசெய்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு தமிழ்நாடு வருகிறது. இந்தியா-அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். வணிகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இவ்வாரம் தமிழ்நாட்டில் பாதிப்புகளை ஆய்வுசெய்ய உள்ளது.
அமெரிக்காவின் சுங்க வரிகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, வணிகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் (Parliamentary Standing Committee on Commerce) சென்னை மற்றும் கோயம்புத்தூரில் வாகன மற்றும் ஜவுளித் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினர். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மற்றும் துறை சார்ந்த அறிக்கைகளை நிலைக்குழுக்கள் விரிவாக ஆராயும். மசோதா தொடர்பான நிபுணர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.பாதுகாப்பு, கல்வி, வணிகம் போன்ற பல்வேறு துறைகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், மசோதாக்கள் மற்றும் கொள்கைகளை ஆழமாக ஆய்வு செய்து, அதன் தாக்கங்களை ஆராய்ந்து, நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கும் ஒரு முக்கியக் கருவியாகச் செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை நேரடியாக ஆய்வு செய்வதன் மூலம், மாநிலத்தின் தேவைகள் தேசிய அளவில் கவனிக்கப்படுகின்றன.
சென்னை மற்றும் கோவையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறையினருடன் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்தும். சென்னையில் ஆட்டோமொபைல் துறையினரை சந்தித்து பாதிப்புகளை கேட்டறிய உள்ளது குழு. கோவையில் பின்னலாடை நிறுவனத்தினரை சந்தித்து பாதிப்புகளை அறிய உள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு. டிரம்ப் வரியால் பின்னலாடை ஏற்றுமதி கடுமையாக சரிந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

