வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிய்வத்துள்ளார். ‘வெனிசுலா மீது டிரம்ப் எடுத்த நடவடிக்கை, அமெரிக்காவை பாதுகாப்பானதாகவும் வலுவானதாகவும் மாற்றாது. வெனிசுலா அதிபர் மதுரோ சர்வாதிகாரி என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் டிரம்ப்பின் நடவடிக்கையை ஏற்க முடியாது.வெனிசுலா மீது டிரம்ப்பின் தாக்குதல் போதைப்பொருள் பற்றியதோ ஜனநாயகத்தை பற்றியதோ இல்லை. வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்துக்காகவே டிரம்ப் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளார். தன்னை மிகப் பெரிய தலைவர் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே டிரம்ப் இதை செய்துள்ளார்’ என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
