வாஷிங்டன்: இந்தியாவின் ஆதார் அட்டை, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது கருத்தை வரவேற்கும் வகையில் சிலிக்கான் வேலியின் புகழ்பெற்ற முதலீட்டாளர் வினோத் கோஸ்லா கூறுகையில், ‘‘இந்தியாவில் ஆதார் அடையாள அட்டை பல மோசடிகளை குறைத்துள்ளது. இது விருப்பத்தின் பேரில் பெறக்கூடியது என்றாலும் அந்த அட்டை இல்லாதவர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அமெரிக்காவில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் என பல அடையாள அட்டைகள் உள்ளன. ஆனாலும் ஆதார் போன்ற பொதுவான டிஜிட்டல் அடையாள அட்டை அமெரிக்கர்களுக்கும் வேண்டும் என்ற எலான் மஸ்க் கருத்தை ஆதரிக்கிறேன். இதே போல வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வேண்டுமென மஸ்கின் கருத்தை வரவேற்கிறேன்’’ என்றார்.
