விழுப்புரம், டிச. 31: விழுப்புரம் அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். விழுப்புரம் அருகே கொடுங்கால் ஊராட்சி தலைவர் மலர்விழி நேற்று கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரிடம் பேச்சு நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனை ெதாடர்ந்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கொடுங்கால் ஊராட்சியில் கடந்த ஒருவருடமாக துணைத்தலைவர் போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வருகிறார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் செலவு செய்த பட்டியலை ஒரு வருட காலமாக துணைத்தலைவர் அனுமதிப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி, போதிய காலத்தில் செய்துதர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே ஆட்சியர் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
