பித்தளை விலை ஏற்றத்தை அடுத்து பொங்கல் பித்தளை பானைகளின் விலை கடுமையாக உயர்வு

 

கும்பகோணம்: பித்தளை விலை ஏற்றத்தை அடுத்து பொங்கல் பித்தளை பானைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்பட்ட பித்தளை தகடு தற்போது ரூ.1100ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட, இந்தாண்டு பொங்கல் பானை விலை, 10 முதல், 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி பாத்திர உற்பத்தி பட்டறைகளில் உற்பத்தியாளர்கள் பொங்கல் பானை உற்பத்தி தீவிரமாகி உள்ளது. பட்டறைகளில், எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் டேக் ஷா, களி பானை, கோதாவரி குண்டு, எம்.எஸ்.பானை, உருளி பானை, வெண்கல உருளி என பல்வேறு வகையான பொங்கல் பானைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பானைகளை பாலீஷ் செய்து, விற்பனைக்கு அனுப்பும் பணியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பொங்கல் பானை ஒரு கிலோ எடை கொண்ட வெண்கல பானை, 1,100 ரூபாய், பித்தளை – 1,200 ரூபாய், செம்பு – 1,400 ரூபாய், உருளி பானை – 1,100 ரூபாய்க்கும், வெண்கல உருளி – 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பானையின் எடை அதிகரிக்கும்போது, உற்பத்தி கூலி உயர்வால், அதன் விலையும் அதிகமாக விற்கப்படுகிறது. மூலப் பொருட்களின் விலை மற்றும் கூலி உயர்வு ஆகியவற்றால் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு, 10 முதல் 15 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது என என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

பித்தளை பொங்கல் பானைகளின் விலை அதன் எடை மற்றும் அளவைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, ஒரு கிலோ எடை கொண்ட பானைகள் சுமார் ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையிலும், சிறிய அளவிலான பானைகள் ரூ.1,400 முதல் ரூ.2,500 வரையிலும், மேலும் பெரிய பானைகள் அல்லது செட்கள் ரூ.2,700 அல்லது அதற்கு மேலும் விற்கப்படுகின்றன. உலோகத்தின் தரம் மற்றும் பூச்சு (Tin coating) போன்ற காரணிகளும் விலையைத் தீர்மானிக்கின்றன. பானையின் எடை அதிகரிக்கும்போது விலை அதிகரிக்கும். உலோகத்தின் விலை மற்றும் உற்பத்தி கூலி உயர்வால் விலைகள் மாறுபடும்.

Related Stories: