கோயம்புத்தூர்: தொடர் விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி. சேத்துமடை சோதனைச்சாவடியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
புத்தாண்டையொட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு பாதுகாப்பிற்காகவும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சில வருடங்களாக (2018, 2021-ல்) காப்பகம் மூடப்படுவது, பட்டாசுகள் வெடிக்கத் தடை, மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது எனவே, சுற்றுலா செல்பவர்கள் வனத்துறை அறிவிப்புகளைக் கவனித்து, புத்தாண்டை அமைதியாகக் கொண்டாட வேண்டும்
வனச் சாலைகளில் இரவு நேர பயணம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வனத்தின் நடுவே பட்டாசு வெடிப்பது, மது அருந்துவது, இசை ஒலிக்கவோ கூடாது என வனத்துறை உத்தரவு அளித்துள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சூழல் சுற்றுலா செயல்பாடுகள், அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவுகள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படும்.
பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் முழுமையான தடை விதிக்கப்படுகிறது, இது வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகும். சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்தவும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
