×

சானசந்திரம் கிராமத்தில் சிதிலமாகி கிடக்கும் கிராம வர்த்தக அழைப்பு மையம்

*சமுதாயக் கூடமாக மாற்ற கோரிக்கை

ஓசூர் : ஓசூர் அடுத்த சானசந்திரம் கிராமத்தில் பாழடைந்த நிலையில் உள்ள கிராம வர்த்தக அழைப்பு மையத்தை, சமுதாயக் கூடமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஓசூர் அருகே சென்னத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சானசந்திரம் கிராமத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளால் தனியார் மூலம் கிராம வர்த்தக அழைப்பு மையம் என செயல்பட்டது. இதில் கிராமப்புற பகுதி மாணவ, மாணவிகள் பலர் கணினி கற்று வந்தனர்.

அவர்களின் பணிக்கு ஊதியமும் வழங்கப்பட்டது. இதனை தனியார் ஒருவர் நடத்தி வந்த நிலையில், திடீரென செயல்பட்டு வந்த கிராம வர்த்தக அழைப்பு மையம் மூடப்பட்டது. தற்போது, இந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது.இந்த கட்டிடத்தை மீண்டும் மாநகராட்சி சீரமைத்து, சமத்துவ கூடமாக அமைத்திட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து திமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமாஞ்சி ரெட்டி கூறுகையில, ‘சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, சமுதாய கூடத்திற்காக இந்த கட்டிடத்தை கட்டப்பட்டது.

அப்போது, மாவட்ட நிர்வாகம் தனியார் மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கணினி கற்றுக்கொடுக்கும் வகையில், கிராம வர்த்தக அழைப்பு மையமாக செயல்பட்டது. அது தற்போது மூடப்பட்டு பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை சீரமைத்து, சமுதாய கூடமாக மாற்ற வேண்டும்,’ என்றார்.

Tags : Sanachandram ,Hosur ,Sennathur ,Hosur… ,
× RELATED சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகம்