×

சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி என்எச்எம் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதார துறையில் தேசிய கிராமப்புற சுகாதார இயக்க (என்எச்எம்) ஊழியர்கள் 700க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.10 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என பாஜக-என்ஆர் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனிடையே முதல்வர் ரங்கசாமி என்ஆர்எச்எம் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அவர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால் முதல்வர் அறிவித்த சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், என்ஆர்எச்எம் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக என்ஆர்எச்எம் ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 24ம் தேதி முதல் சுகாதார துறையின் தேசிய சுகாதார இயக்க இயக்குனர் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்று இரவு திடீரென சுகாதார துறையின் வாயில் முன்பு அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனே இதுகுறித்து தகவல் அறிந்த பெரியக்கடை காவல்நிலைய ேபாலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து ேபாக செய்தனர்.

Tags : NHM ,Puducherry ,National Rural Health Mission ,Congress ,
× RELATED வனத்துறை சார்பில் முதுமலையில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு