ஒடுகத்தூர், டிச.20: சேலம் மாவட்டம், ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சத்யா(45). இவர் தனது மகள் கவுசல்யா(20) என்பவருடன் நேற்று அதிகாலை 2 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் உள்ள நாட்டு மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டு வந்தார். காரை பொம்மியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டி வந்தார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த செதுவாலை அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி சென்டர்மீடியனில் மோதியது. இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே, தனது மகள் கண்ணெதிரே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்த கவுசல்யா மற்றும் டிரைவர் மோகன் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த சத்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கவுசல்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மகள் கண்ணெதிரே தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்டர்மீடியன் மீது கார் மோதி சேலம் பெண் பலி மகள் கண்ணெதிரே பரிதாபம் பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில்
- சேலம்
- பள்ளிகொண்டா
- ஒடுகத்தூர்
- சத்ய
- ரெட்டியூர்
- சேலம் மாவட்டம்
- வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டம்
- கோசலைக்கும்
- பொம்மியம்பட்டி
