ஒன்றிய அரசின் கலால் சட்டத்திருத்தத்தால் சிகரெட் விலை 3 மடங்கு உயர்வு

 

டெல்லி: ஒன்றிய அரசின் கலால் சட்டத்திருத்தத்தால் சிகரெட் விலை 3 மடங்கு உயருகிறது. ஒன்றிய அரசின் கலால் சட்டத்திருத்தத்தால் ஒரு சிகரெட் விலை ரூ.18லிருந்து ரூ.72ஆக உயர வாய்ப்பு உள்ளது. அண்மையில் புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய மசோதாவின்படி 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.200 முதல் ரூ.735 வரை இருந்த வரி ரூ.2,700லிருந்து ரூ.11,000 ஆக உயருகிறது. மெல்லும் புகையிலைக்கான வரியும் 25%லிருந்து 100%ஆக உயர உள்ளது. ஹூக்கா புகையிலைக்கான வரி 25%லிருந்து 40%ஆக உயர வாய்ப்பு உள்ளது.

Related Stories: