5 நாளில் பயன்பாட்டுக்கு வர இருந்த நிலையில் பீகாரில் சோதனையின்போது சரிந்து விழுந்த ரோப் கார்

பாட்னா: பீகார் மாநிலத்தில் சோதனை கட்டத்தின்போது தூண்களுடன் ரோப் கார் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் ரோஹ்தாஸ்கர் மற்றும் அருகில் உள்ள கோயில்களுக்கு செல்வதை எளிதாக்கும் வகையில் ரூ.13கோடி மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த ரோப்வே திட்டத்தை பீகார் மாநில பாலம் கட்டுமானக் கழகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் ஐந்து கோபுரங்கள் மற்றும் 12 டிராலி கேபின்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் நான்கு பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும். இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் புத்தாண்டு அன்று திட்டத்தை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டு இருந்தது.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் ரோப் கார் இயக்கும் பணிகளின் இரண்டாவது கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது டவர் எண் 5க்கு அருகில் உள்ள தூண்களில் ஒன்று செயலிழந்ததாகவும், இதன் காரணமாக சங்கிலி எதிர்வினை ஏற்பட்டு பல தூண்கள் மற்றும் 4 கேபின்கள் இடிந்து விழுந்தன. சுமை அதிகரிப்பு சோதனையின் ஒரு பகுதியாக கோட்டை நோக்கி நான்கு காலி கேபின்கள் அனுப்பப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories: