புதுடெல்லி: காங்கிரஸ் வெளிநாட்டுத்துறை தலைவர் சாம் பிட்ரோடா, உலக முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கம் என்றும் அதன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி சமீபத்தில் ஜெர்மனிக்கு சென்றிருந்தார் என்றும் கூறியிருந்தார். இது குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷூ திரிவேதி கூறுகையில்,உலக முற்போக்கு கூட்டணியில்(ஜிபிஏ) காங்கிரசுக்கு ஒரு அதிகாரப்பூர்வ நிலை உள்ளது.
ராகுல்காந்தி அதன் தலைமைக்குழுவில் ஒரு பகுதியாக இருக்கிறார் என்று வெளிப்படுத்தி உள்ளார். ராகுலின் பாரம்பரிய குடும்ப ஆலோசகர் சாம் பிட்ரோடா, பேட்டி ஒன்றில் காங்கிரஸின் உண்மையான முகத்தை தற்செயலாக அம்பலப்படுத்திவிட்டார். இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் ஆதரவுடன் மத்தியில் தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் ராகுல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, அவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்” என்றார்.
