சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டது. கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக நிகழ்கிறது. இது மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் புதிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அந்த புதிய விதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48 கவுன்சிலர்கள் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு, போளூர், செங்கம் உள்ளிட்ட நகராட்சிகளில் தலா 22 வார்டுகள் உருவாக்கம். கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சங்ககிரி நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
