பெரம்பலூர் அருகே குவாரியில் கல் சரிந்து ஜேசிபி ஆப்ரேட்டர் படுகாயம்

பெரம்பலூர், டிச. 25: பெரம்பலூர் அருகே கல்பாடி கிராமத்தில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் கல் குவாரியில் மண் மற்றும் கல் சரிந்து இயந்திரம் மீது விழுந்ததில் ஆப்பரேட்டர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமம், காளியம்மன் நகரைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் முருகேசன்(48). இவர் கல்பாடி கிராமத்தில் அரசு அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார்.

நேற்று முருகேசனுக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து, ஜேசிபி டிரைவர் திருப்பத்தூர் மாவட்டம், ராஜமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சிவா(28), என்பவர் மூலம் ஒரு ஜேசிபியில் லாரிக்கு கல் ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்போது மலையில் இருந்து கல் மற்றும் மண் சரிந்து இயந்திரம் மேல் விழுந்ததில் டிவைர் சிவாவுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து மருவத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: