கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் சாலை பணியாளர்கள் ஒப்பாரி போராட்டம்

பெரம்பலூர், டிச. 23: சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை பணியாளர் சங்கத்தினர் ஒப்பாரி முழக்க போராட்டம் நடத்தினர். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று செயல்படுத்தவேண்டும். கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளராக பணி நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பாக ஒப்பாரி முழக்க போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் சாமி வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், மதியழகன், மாவட்ட இணைச் செயலாளர்கள் பெரியசாமி, பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் துவக்கவுரை பேசினார். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கை விளக்கவுரை பேசினார். தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் மார்கண்டன் நன்றி தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் அனைவரும் நூதனமாக தலைகுனிந்தபடி வட்டமாக நின்று ஒப்பாரி வைத்தபடி போராட்டத்தை நடத்தினர்.

Related Stories: