அரியலூர், டிச.20: அரியலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன் நடைபெற்ற லிகாய் முகவர் சங்க அமைப்பு தின விழாவுக்கு, கிளைத் தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் சிற்றம்பலம் சங்கக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி பேசினார். கிளை மேலாளர் ஜெயகண்ணன், துணை மேலாளர் சக்திவேல், நிர்வாக அலுவலர் மோதிலால் நேரு, லிகாய் அமைப்பின் இந்திய பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஊழியர் சங்கச் செயலர் ஆபிரகாம் ஜோஸ்வா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், காப்பீடு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை கண்டிப்பது மற்றும் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் போனசை உயர்த்தித் தரவேண்டும். முகவர்கள் குழுகாப்பீடு முகவாண்மை இருக்கும் வரை வழங்க வேண்டும். கமிஷன் குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, பழைய கமிஷன் முறையே பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கவுரவத் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சவரிராஜ் நன்றி கூறினார்.
