ஜெயங்கொண்டம், அரசு கலை கல்லூரியில் சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஜெயங்கொண்டம் டிச.24: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதரா மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் முதல்வர் இராசமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட வள பயிற்றுனர் சுகந்தி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரோஜினிதேவி கலந்து கொண்டு மாதவிடாயின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மாதவிடாயைக் கையாளுதல் மற்றும் பெண்கள் அணுகக்கூடிய சுகாதார மேலாண்மை பற்றி மாணவிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் மாதவிடாயின் போது ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள், மனநலப் பிரச்சனைகள் அதனை கையாளும் முறைகள், ஊட்டசத்தான உணவுகளை உட்கொள்ளுதல், மாதவிடாயின் போது பயன்படுத்தும் பேடுகளை வெளியேற்றும் முறைகள் மற்றும் மாணவிகள் மேற்கொள்ளவேண்டிய உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: