கோவை,டிச.22: கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நர்சுகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஎம்ஆர்பி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து கோவை அரசு மருத்துவமனைவளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தொடர்ந்து 3வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 8 ஆயிரம் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
