பொன்னமராவதி, டிச. 24: குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராம புற வேளாண் மாணவிகள் அனுபவ திட்டத்தின் கீழ் பொன்னமராவதி காரையூர் கிராமத்தில் சுய உதவி குழு மற்றும் வங்கி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலையில் படிக்கும் வேளாண் மாணவிகள், கிராம புற அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக கரையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் சுய உதவி குழுவை சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
சுய உதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. சுய உதவி குழுவின் மூலம் பெண்களுக்கு சணல் பை தயாரிப்பு பயிற்சி மற்றும் அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறித்து விளக்கப்பட்டது. மேலும், கனரா வங்கி மூலம் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கி சேவைகள், சேமிப்பு கணக்கு, கடன் வசதிகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த தகவல்களை மாணவிகள் அறிந்து கொண்டு, அந்த வங்கி நடவடிக்கைகளில் இருந்து நடைமுறை அறிவை பெற்றனர்.
இதில் கல்லூரி மாணவிகள் மகாலட்சுமி, மாளவிகா, மாலினி, நந்தினி தேவி, பிரீத்தி லஷ்மி, பிரியாஞ்சலி, பிரியங்கா மற்றும் சுவேதா ஆகிய வேளாண் மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சிகளிலும், கலந்துரையாடலிலும் கலந்து கொண்டனர்.
