ஈரோடு, டிச. 25: ஈரோடு மாவட்டம், கோபி சரகம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஏ.205 சிக்கரசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைப் பிரித்து புதிதாக ஈ.ஜி.63 கெஞ்சனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான அங்கீகாரச் சான்றினை, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, முதன்மை அமைப்பாளர் ஏ.குணசேகரனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் இரா.முத்துசிதம்பரம் மற்றும் கள அலுவலர், கூட்டுறவுத்துறை சார் பதிவாளர்கள், சங்கச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
