சிங்காநல்லூர் கிளை நூலகத்தில் கூடுதல் கட்டிடம் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

கோவை, டிச.25: கோவை சிங்காநல்லூர் கிளை நூலகத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாவில், கவுன்சிலர்கள் ஆதி மகேஷ்வரி திராவிட மணி, சிவா, சுமித்ரா நாகராஜ், முன்னாள் சிங்காநல்லூர் நூலகர் கே.ஜே.கலாவதி, வாசகர் வட்டத்தலைவர் சுரேஷ்குமார் (OTPW பவுண்டேசன்) ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

இதனை தொடர்ந்து நூலகம் வாசகர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1,500 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 17 பேர் புரவலர்களாக இணைந்தனர். முடிவில், நூலகர்கள் மு.இராணி, ர.ஜெயந்தி நன்றி கூறினர்.

 

Related Stories: