புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

காரியாபட்டி, டிச.25: புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தில் 1964-1967ம் ஆண்டு அருட்தந்தை மைக்கேல் புதிய ஆலயம் கட்டினார். மிக்கேல் அதிதூதரின் ஆலயமாக இருக்கட்டும் என்று புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் என்று நிறுவப்பட்டது. அதிதூதரின் ஆசியுடன் 2016ம் ஆண்டு அருட்தந்தை ம.ச.முத்து தூய மிக்கேல் அதிதூதர் கற்கோயிலாக கட்டினார்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்களில் அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்தோடு கலந்து கொண்டு பெருமை சேர்ப்பது வழக்கம். தற்போது வக்கணாங்குண்டு மரிய பிச்சை, பங்கு மக்கள் உறுதுணையோடு ஆலயத்தை பராமரித்து வருகிறார். ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மதநல்லிணக்கமாக அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.

 

Related Stories: